உன்னை உணர்தல்
உணர்த்த படுவதை உணர்த்தல்
உணர்ந்ததை உணர்ந்து நடத்தல்
உன்னை உணர்தல் :
நான் யார் ? எதற்காக பிறப்பிக்கப்பட்டேன்? யாரால் யார்மூலம் ஏன் அந்த இடத்தில் பிறந்தேன்? என்றெல்லாம் கேள்விகள் பல மனதில் மிகவும் சுலபமாக எழும். இவாறு எழும் கேள்விகளுக்கு விடையை தேடு, அப்போதுதான் நீ யார் என்பதை உணர முடியும். உன்னை உணர்தலில் முழுமை அடைவது சிறிய காரியம் என எண்ணுவது தவறு. ஆனால் தொடர்ந்து தேடு. ஒரு நாள் உன்னிலும் நீ கடவுளை உணர்வாய்.
உணர்த்த படுவதை உணர்த்தல்:
எம்மை அறியாமலே எமக்கு இலகுவாக 'உணர்தல்' பாடத்தை வாழ்கையே கற்று தந்துவிடும் இல்லையா நண்பர்களே? உதாரணமாக சொல்வதென்றால் எத்தனையோ அடுக்கிக்கொண்டு போகலாம். ஒன்றை பார்ப்போமானால், மது அருந்துவது மயக்கத்தை தரும் வேதனையை போக்கும், அதே மது எம்மை அருந்தினால் எல்லாருக்கும் வேதனையை தருவதும் அதுவாகவே இருக்கும். இது வாழ்க்கையில் யாவரும்மே உணர்ந்தது. அப்படியானால் இங்கே உணர்த்தபடுவது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. எப்படி உள்ளங்கை நெல்லியாக உணர்த்த படுவதை உணராமல் இருப்பது யார் தப்பு?
உணர்ந்ததை உணர்ந்து நடத்தல் :
நெருப்பில் கை வைத்தால் சுடும் என்று உணர்ந்ததை உணர்ந்தே நாம் அதைதொடுவதில்லை. இதைத்தான் சொல்வது உணர்ந்ததை உணர்ந்து நடத்தல். ஆனால் நாமோ உணர்ந்த பின்னும் நெருப்போடு உறவு கொண்டு தீ காயங்களால் வேதனைப்பட்டால் அது நம் அறிவீனமாக காட்டுகின்றது என்று எங்களாலே உணர கூடியதாக இருக்கும் என்பது உண்மை.
No comments:
Post a Comment