Sunday, September 26, 2010

மூன்றை உணரு முற்றும் உணர்வாய்



உன்னை உணர்தல் 
உணர்த்த படுவதை உணர்த்தல்
உணர்ந்ததை  உணர்ந்து நடத்தல் 


உன்னை உணர்தல் :

நான் யார் ? எதற்காக பிறப்பிக்கப்பட்டேன்? யாரால் யார்மூலம் ஏன் அந்த இடத்தில் பிறந்தேன்? என்றெல்லாம் கேள்விகள் பல மனதில் மிகவும் சுலபமாக எழும். இவாறு எழும் கேள்விகளுக்கு விடையை தேடு, அப்போதுதான் நீ யார் என்பதை உணர முடியும். உன்னை உணர்தலில் முழுமை அடைவது சிறிய காரியம் என எண்ணுவது தவறு. ஆனால் தொடர்ந்து தேடு. ஒரு நாள் உன்னிலும் நீ கடவுளை உணர்வாய்.


உணர்த்த படுவதை உணர்த்தல்:

எம்மை அறியாமலே எமக்கு இலகுவாக 'உணர்தல்' பாடத்தை வாழ்கையே கற்று தந்துவிடும் இல்லையா நண்பர்களே? உதாரணமாக சொல்வதென்றால் எத்தனையோ அடுக்கிக்கொண்டு போகலாம். ஒன்றை பார்ப்போமானால், மது அருந்துவது மயக்கத்தை தரும் வேதனையை போக்கும், அதே மது எம்மை அருந்தினால் எல்லாருக்கும் வேதனையை தருவதும் அதுவாகவே இருக்கும். இது வாழ்க்கையில் யாவரும்மே உணர்ந்தது. அப்படியானால் இங்கே உணர்த்தபடுவது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. எப்படி உள்ளங்கை நெல்லியாக உணர்த்த படுவதை உணராமல் இருப்பது யார் தப்பு?


உணர்ந்ததை  உணர்ந்து நடத்தல் :

நெருப்பில் கை வைத்தால் சுடும் என்று உணர்ந்ததை உணர்ந்தே நாம் அதைதொடுவதில்லை. இதைத்தான் சொல்வது உணர்ந்ததை உணர்ந்து நடத்தல். ஆனால் நாமோ உணர்ந்த பின்னும் நெருப்போடு உறவு கொண்டு  தீ காயங்களால் வேதனைப்பட்டால் அது நம் அறிவீனமாக காட்டுகின்றது என்று எங்களாலே உணர கூடியதாக இருக்கும் என்பது உண்மை.

"இந்த மூன்று உணர்தலையும் நீ உணர்ந்தால் உன்னை உணரபவர்களோ எத்தனையோ " - ஜி.ஆர் - 2010

Wednesday, September 22, 2010

திறக்கும் வாயை மூடு

நாம் ஒவ்வொருவரும் எங்களை  போலவே மற்றவர்களையும் நேசிக்கிறோம்.
அப்போதுதான் நாம்  மனம் விட்டு அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு " அப்பா இப்போதுதான் நின்மதி என்ட இன்ப துன்பத்த கேட்க ஆள் இருக்கு"  என்று பெருமூச்சு விடும் கணமே தயாராகிவிடும் எமக்கு ஆப்பு.

யாரய்யா நம்மள பற்றி கவலைப்படபோறாங்க  என்னென்றால் அவனவனுக்கு அவன்ட கஷ்டம் தலைக்கு மேல இருக்கு. உண்ட கஷ்டத்த அவனா? அவன நம்பி சொல்ல சொன்னான். யோசித்து பாருங்க எல்லாரையும் கடவுள் ஒரே மாதிரிதான் படைசி இருக்கான் . நாம் தெரிவும் செய்யும் தப்பான முடிவுகளாலும் வழிகளாலுமே  நம்ம தலையில மண்ண வாரி போட்டுட்டு கடவுள் படைச்சது  சரியில்ல என்றெல்லாம் புலம்புவதே தவறு.

நம்ம வாய்க்கு தெரியாது யாரோடு என்ன பேசனும் என்று கண்டபடி புழுகித்தள்ளும் அதுதான் நமக்கு ஆப்பகிடும்.

"திறக்கும் வாயை மூடு உன் திறமைதனை ரகசியமாக தேடு" - ஜி.ஆர்.-(2010)

இறந்த பின்னும் உயிர் வாழ்வேன்

நண்பர்களே....

நான்  பல திறைமைகளை கொண்டதால் என்னவோ எல்லோரும் என்னை சாதகமாக்கி கொண்டனர். நான் எனக்காக வாழாமல் எல்லோருக்காகவும் வாழ்ந்த போது சன்மானங்களுக்கு பதிலாக பல அவமானங்களை சம்பாதித்தேன் .

நல்ல நண்பர்கள் என்று நயவஞ்சகர்களின் நட்பை  உண்மையான நட்புடன் பேரம் பேசி ஒப்பிட்டு பார்த்த நட்பில் நாஸ்திகன் நான். உண்மையிலே கடவுளையும்  உணராதவன். இன்று கடவுள் நண்பனான பின் உண்மையான நட்புகளில் கூட நாஸ்திகத்தை உணர்கிறேன்.

இதனால் என்னையே முதலில் நண்பனாக்கி, என்னுடன் நான் நட்பாய் இருப்பது எப்படி என்று அறிந்து, என்னிலிருக்கும்  ஒவ்வொரு  எதிரியையும் வென்று, உலகை உணர்ந்து, இறந்தும் உயிர் வாழ போவதுதான் என் இந்த பிறப்பின் தேடலாக இருக்கும் .

'' உன்னுடன் நீ கொள்ளும் நட்பு  உண்மையிலே அதுதான் உலக நட்பு " - ஜி.ஆர் (2010)

என்னையே நான் தேடிபோகிறேன்...

எல்லோரும் எப்படியும் வாழ்க்கையை வாழலாம் என்று பலரும் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து அவங்க போல வாழ்ந்தா  நம்மலப்போல முட்டாள் யாருமே இல்ல என்று சொன்னா அது தப்பே இல்லை.

 நம்மள சுத்தி வாழ்ரவங்க,  வாழ்க்கை நடத்துறது நம்மள மற்றவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க? என்ன சொல்லுவாங்க ? என்று மற்றவங்களுக்காகவே வாழ்ந்து மண்ணோடு மண்ணா போய்டுவாங்க.

என்னையா வாழ்க்கை இது? அப்ப யாருதான் அவனுக்காக வாழ்ந்திருக்கான். அப்படி வாழ்ந்தா அது சுயநலம் என்றேல்லாம் சமூகம் சொல்லுமே என எண்ணத்தோன்றும்.

அதெல்லாம்  காதில போட்டுக்காம உனக்காக வாழு. நீ யாரு என்று  தேடு.

அதுதான் அய்யா நான் என்னையே தேடி போகிறேன்.

"நீ உன்னைத் தேடு உலகம் உன்னைத் தேடும் " - ஜி.ஆர் (2010)