Wednesday, September 22, 2010

இறந்த பின்னும் உயிர் வாழ்வேன்

நண்பர்களே....

நான்  பல திறைமைகளை கொண்டதால் என்னவோ எல்லோரும் என்னை சாதகமாக்கி கொண்டனர். நான் எனக்காக வாழாமல் எல்லோருக்காகவும் வாழ்ந்த போது சன்மானங்களுக்கு பதிலாக பல அவமானங்களை சம்பாதித்தேன் .

நல்ல நண்பர்கள் என்று நயவஞ்சகர்களின் நட்பை  உண்மையான நட்புடன் பேரம் பேசி ஒப்பிட்டு பார்த்த நட்பில் நாஸ்திகன் நான். உண்மையிலே கடவுளையும்  உணராதவன். இன்று கடவுள் நண்பனான பின் உண்மையான நட்புகளில் கூட நாஸ்திகத்தை உணர்கிறேன்.

இதனால் என்னையே முதலில் நண்பனாக்கி, என்னுடன் நான் நட்பாய் இருப்பது எப்படி என்று அறிந்து, என்னிலிருக்கும்  ஒவ்வொரு  எதிரியையும் வென்று, உலகை உணர்ந்து, இறந்தும் உயிர் வாழ போவதுதான் என் இந்த பிறப்பின் தேடலாக இருக்கும் .

'' உன்னுடன் நீ கொள்ளும் நட்பு  உண்மையிலே அதுதான் உலக நட்பு " - ஜி.ஆர் (2010)

No comments:

Post a Comment